LocalWorld

காங்கிரஸின் 21 அமைச்சர்கள் கர்நாடக அரசிலிருந்து விலகல்!

கர்நாடகா மாநிலத்தில் 21 காங்கிரஸ் அமைச்சர்கள் தாமாக முன்வந்து தங்களது பதவியை நேற்று இராஜிநாமா செய்தனர் என மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் 14 எம்.எல்.ஏ.க்களின் இராஜிநாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசைக் காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் சிறுதொழில் துறை அமைச்சராக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.நாகேஷ் தனது அமைச்சுப் பதவியை நேற்று இராஜிநாமா செய்தார்.

இந்தநிலையில், கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் இடம்பெற்றிருந்த 21 அமைச்சர்கள் தாமாக முன்வந்து தங்களது பதவியை இராஜிநாமா செய்தனர் என அம்மாநில சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் பரமேஸ்வரா வீட்டில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் இந்த அறிவிப்பை சித்தராமையா வெளியிட்டார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading