EastLocal

காத்தான்குடி பள்ளி மயானத்திலிருந்து துப்பாக்கி, கைக்குண்டுகள், வாள் மீட்பு!

மட்டக்களப்பு, காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் மயானத்தில் இருந்து இன்று காலை ஆயுதங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி ஜாமியுழ்ழாபீரின் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் இருந்தே இந்த ஆயுதங்களும், பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது துப்பாக்கி ஒன்று, இரண்டு கைக்குண்டுகள், வாள், கைக்கோடரி, வோக்கிடோக்கி இரண்டு, கணினி கார்ட் டிஸ்குகள் உட்பட பெருமளவான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் ஹாசீமின் கோட்டையாக விளங்கிய காத்தான்குடிப் பகுதியில் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டு வரும் படையினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் மேற்படிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading