Technology

360 டிகிரி கோணத்தில் திரும்பக் கூடிய கார் கண்டுபிடிப்பு

ஹூண்டாய் நிறுவனம் 360 டிகிரி கோணத்தில் திரும்பும் மற்றும் குறுக்காக கூட ஓட்டக்கூடிய நான்கு சக்கரங்கள் கொண்ட காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

“இ-கார்னர் சிஸ்டம்” என்று அழைக்கப்படும் இந்த கார் 360 டிகிரி கோணத்தில் திருப்பவும், குறுக்காக ஓடவும் அனுமதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் நான்கு சக்கரங்களும் அனைத்து திசைகளிலும் திரும்பமுடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடினமாக இடங்களிலும் இலகுவாக பார்க்கிங் செய்ய முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

நண்டின் நடையை அடிப்படையாக கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இடம்பெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading