Gossip

61 வயதில் இரண்டு திருமணங்கள் மூன்றாவது திருமணம் செய்ய தயாராகும் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் ரஜினி அவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாமலை இந்த திரைப்படத்தில் குஷ்பூ மனோரமா உள்ளிட்டா பலர் நடித்துள்ளனர் இந்த படம் வெளியாகி ரசிகர் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்றது அது மட்டும் அல்லாமல் இந்த திரைப்படம் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

மேலும் அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிக்கு நண்பராக நடித்தவர் தான் சரத்பாபு இவர் பல திரைப்படங்களில் நடிகராகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சரத்பாபு அவர்கள் 61 வயதாகியும் மூன்றாவது திருமணம் செய்ய நடிகையை தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சரத் பாபு அவர்கள் தனது 22 வயதில் தெலுங்கு நடிகையான ரமா பிரபாவை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சில வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் அதன் பின்னர் பிரபல வில்லன் நடிகர் ஆன எம் என் நம்பியாரின் மகளான சினேகா நம்பியாரை திருமணம் செய்து கொண்டார். 20 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள்  கடந்த 2011 ஆம் ஆண்டு சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

சரத் பாபு அவர்கள் தற்போது 61 வயது நெருங்கிய உள்ளார் இந்த நிலையில் இரண்டு திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் மூன்றாவதாக ஒரு நடிகையை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது அதுமட்டுமல்லாமல் இதற்கு பதில் அளித்த சரத் பாபு அவர்கள் உடலும் மனமும் இன்னும் வலிமையாக தான் இருக்கிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading