Lead NewsLocal

மதுஷுடன் கைதான நடிகர் ரயனின் கார் கேரளாக் கஞ்சாவுடன் சிக்கியது!

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோவன் பயன்படுத்திய கார் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தக் கார் கேரளாக் கஞ்சாவுடன் நேற்று மாலை வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்தக் ஹோட்டல் உரிமையாளர் அமில பிரசங்க ஹெட்டிஹேவா எனப்படும் மதுஷுடன் சேர்த்து கைதுசெய்யப்பட்ட சுரன்பி சுத்தா என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரபல நடிகர் ரயன் வேன் ரோவன் வௌிநாடு செல்வதற்கு முன்னர், சில தினங்கள் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளதுடன், இருவருடன் சேர்ந்து வௌிநாடு சென்றுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெலிகம பொலிஸாரால் சுரன்பி சுத்தாவின் மூத்த சகோதரரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது இந்த கார் நடிகர் ரயன் வேன் ரோவன் வந்திருந்த கார் என்று தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

காரை சோதனை செய்த போது காரில் இருந்து 5750 மில்லி கிராம் கேரளாக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading