Local

இளம் ஜோடி மீது துப்பாக்கிச்சூடு! – இருவரும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்ப்பு

தொம்பே, வனலுவாவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

வாக்குவாதம் மோதலாக மாறியதில் நபர் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரும் தொம்பே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வனலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய திருமணமான ஜோடி ஒன்றுக்கே சம்பவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரைக் கைதுசெய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading