Amazon நிறுவனம் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானம்!

Amazon நிறுவனம் 18,000க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்க்பபடுகின்றது.
எதிர்பார்த்ததைவிட அந்த எண்ணிக்கை 7,000க்கும் அதிகம் என செய்தி வெளியாகியுள்ளது.
நிறுவனத் தரவரிசையிலிருந்து கூடுதல் பணிநீக்கங்கள் செய்யப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
சியேட்டலைத் (Seattle) தளமாகக் கொண்ட அந்நிறுவனம் அமெரிக்காவில் அதிக ஊழியர்களைக் கொண்டுள்ள இரண்டாவது பெரிய தனியார் நிறுவனமாகக் கருதப்படுகிறது. அதில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.
சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுவனம் அதன் சாதனப் பிரிவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தொடங்கியது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தால் வணிகங்களும் வாடிக்கையாளர்களும் செலவைக் குறைக்க முனைவதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
