EastLocal

வைத்தியசாலை மாடியில் இருந்து குதித்து பிள்ளையான் தற்கொலை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை, கருணைபுரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை பிள்ளையான் (வயது – 64) என்பவரே இவ்வாறு குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்

இவர் கடந்த ஒன்பது வருடங்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

மரண விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading