Local

இராஜாங்க அமைச்சரானார் ஐ.தே.கவின் புத்திக பத்திரன!

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவுக்கு ஜனாதிபதியால் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக இருந்த புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் புதிய அமைச்சுப் பதவியில் அவர் இன்றிரவு பதவிப்பிரமாணம் செய்தார்.

கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுதீன் கடந்த மாதம் அந்த அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்திருந்த நிலையில், அந்த அமைச்சுக்கான பதில் அமைச்சராகவும் புத்திக பத்திரன இன்றுவரை செயற்பட்டிருந்தார்.

ரிஷாத் பதியுதீன் மீண்டும் தனது அமைச்சுப் பதவியை இன்று ஏற்றுள்ள நிலையில், அந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சராக புத்திக பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading