Local

நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதங்கள்!

மதவெறித் தாக்குதல்கள் மற்றும் இன மோதல்களினால் நாட்டின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தநிலையில், இன்றும், நாளையும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே விவாதங்கள் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, குழப்பங்களை விளைவிக்காது அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புடன் விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டும் என சகல கட்சித் தலைவர்களிடமும் நேற்றைய கூட்டத்தில் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading