Local

மகன்மாரின் சண்டையைச் சமரசம் செய்யச் சென்ற தந்தை படுகொலை!

சகோதரர்களுக்கு இடையே சாவி மற்றும் பூச்சாடி தொடர்பில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தைத் தீர்க்க முயற்சித்த சம்பவத்தில் தந்தை கொல்லப்பட்டுள்ளார்.

ஹிங்குராங்கொட, கவுடுல்ல, கொலனிய பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இடையே இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர் 66 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 40 வயதான மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த அசம்பாவிதத்தால் கொலை செய்யப்பட்டவரின் குடும்ப அங்கத்தவர்கள் மூவர் ஹிங்குராக்கொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஹிங்குராக்கொட பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் ஹிங்குராங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading