Local

வத்தளை விபத்தில் இரு பெண்கள் பலி!

வத்தளை, ஹேகித்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவி ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

நீர்கொழும்பு நோக்கிச் பயணித்த கொள்கலன் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண் 21 வயதுடையவர் எனவும், உயிரிழந்த மாணவி 12 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் கொள்கலன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகள் தொடர்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading