World

Googleளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது!

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12 ஆயிரம் ஆட்குறைப்புக்களை  மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கூகுள் மற்றும் ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

உலகெங்கிலும் உள்ள ஆல்பாபெட் பணியாளர்களில் 6 வீதமானோர் ஆட்குறைப்பினால் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

அண்மையில் மைக்ரோசொப்ட் நிறுவனம், 10 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாகவும், அமெசன் நிறுவனம் 18 ஆயிரம் ஆட்குறைப்புகளை செய்யவுள்ளதாகவும் அறிவித்திருந்தன. அந்த வரிசையில் தற்போது ஆல்பாபெட்டும் இணைந்துள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிச்சாய், கடினமாக உழைத்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர்களின் பங்கீடு விலைமதிப்பற்றது எனவும் கூறினார். 

இந்த மாற்றம் எளிதானது அல்ல எனக்கூறிய அவர், ஊழியர்கள் அடுத்த வாய்ப்பை தேடும்போது அவர்களுக்கு ஆதரவளிப்போம் எனவும் கூறினார். 

பணிநீக்கம் செய்யப்படுபவர்களுக்கு 16 வார சம்பளம், 2022 ஆம் ஆண்டுக்கான போனஸ், ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள், ஆறு மாத சுகாதார பராமரிப்பு ஆகியவற்றையும் அவர்கள் பெறுவார்கள் என பிச்சாய் கூறினார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading