Local

“GOTA GO GAMA” வுக்கு எதிராக பொலிஸார் அதிரடி அறிவிப்பு!

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக காலிமுகத்திடல் பகுதியில் அமைதிப் போராட்டங்கள் முன்னெடுத்து வரப்படும் நிலையில், தற்பொழுது அங்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டு வருகின்றது.

அதாவது ஜனாதிபதி செயலகத்துக்கு மேலாக கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி மூலம் இந்த அறிவிப்பு பொலிஸாரால் விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எவரும் பொது இடங்களில்  ஒன்று கூட முடியாது என அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் எந்தவோர் இடத்திலும் அது கடற்கரையாக  இருக்கலாம் உரிய அனுமதியின்றி ஒன்று கூடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபடும் என  தொடர்ச்சியான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading