World

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி காங்கிரஸ் – பா.ஜ.க. ‘குல்லிபாய்’ பிரசாரம்!

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி காங்கிரசும் – பாரதீய ஜனதாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்காக இரு கட்சிகளும் குல்லிபாய் என்ற பிரசார வீடியோவை வெளியிட்டு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

பாஜக சமீபத்தில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியை குறித்து ‘குல்லிபாய்’ என்ற பிரசார ராப் வீடியோவை ட்வீட் செய்து இருந்தது.

வீடியோவில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி சகாப்தத்தின் ஊழல் வழக்குகள் ராப் பாடல்களோடு இணைக்கப்பட்டுள்ளன.

வீடியோ பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக ‘ஆஷாடி’ கோஷங்களை எழுப்புகிறது.

ராபர்ட் வதேராவின் ஊழல் வழக்குகளில் இருந்து நேரு – காந்தி குடும்பம் உட்பட பல்வேறு விவகாரங்கள் இந்த வீடியோ வசனங்களில் காணப்படுகின்றன.

இதையடுத்து, காங்கிரஸ் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான பா.ஜ.க.வை விமர்சிப்பதற்காக ‘குல்லிபாய்’ என்ற பிரசார ராப் வீடியோவை வெளியிட்டுள்ளது.

வீடியோ ‘அஷாதி’ என்ற முழக்கத்தோடு தொடங்குகின்றது. இது பி.ஜே.பி.யின் ஊழல் நிகழ்வுகளைக் சுட்டிக்காட்டுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading