Local

26ஆம் திகதி கூடுகின்றது தமிழரசுவின் செயற்குழு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு கொழும்பு, ஆமர் வீதி – பிரைட்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை பற்றியும், தேசிய மாநாடு நடத்தும் தினம் பற்றியும் தீர்மானிக்கப்படும்.

கட்சி கிளைகள் அமைப்பு, மகளிர், இளைஞர் முன்னணி தொடர்பான முன்னெடுப்புகள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading