Lead NewsLocalNorth

இராணுவத்தின் பிடியில் யாழ். பல்கலைக்கழகம்! – பிரபாகரன், மாவீரர்களின் புகைப்படங்கள் மீட்பு; மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் கைது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், மாவீரர்களின் புகைப்படங்கள், தொலைநோக்கி மற்றும் இராணுவச் சப்பாத்து ஆகியன மீட்கப்பட்டன.

மாணவர் ஒன்றியக் கட்டடம், விடுதி ஆகிய பகுதிகளிலேயே இவை கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading