Lead NewsLocal

யாழ். பல்கலை மாணவர்கள் மீது எடுத்த எடுப்பில் பயங்கரவாதிகள் முத்திரையைக் குத்தவே முடியாது! – பொன்சேகா தெரிவிப்பு

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்பதற்காக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் மீது எடுத்த எடுப்பில் பயங்கரவாதிகள் முத்திரை குத்த முடியாது. அவர்கள் குற்றவாளிகள் இல்லையெனில் வழக்கைத் தொடராமல் உடன் விடுவிக்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“நல்லாட்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெளிப்படையாக விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இது கடந்த ஆட்சியில் மறைமுகமாக இடம்பெற்றன. இந்த ஆட்சியில் வெளிப்படையாக இடம்பெறுகின்றன. இதுதான் உண்மை'” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading