Local

கஞ்சிப்பானவின் தந்தை, சகோதரன் உட்பட 6 பேர் இன்று அதிரடிக் கைது!

பூஸா சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் போதைப்பொருள் கடத்தல்காரர் குற்றவாளியான கஞ்சிப்பான இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் ரத்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சிப்பான இம்ரானைப் பார்க்க இன்று (12) மாலை வந்த உறவினர்களிடம் இருந்த சந்தேகத்துக்குரிய உணவுப் பொதியைச் சோதனையிட்டதில் அதில் இருந்து இரண்டு கைபேசிகள் மற்றும் இரண்டு சார்ஜர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதையடுத்து ரத்கம பொலிஸாரால் கஞ்சிப்பான இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading