World

ஞாயிறன்று ஜப்பான் செல்கின்றார் மோடி!

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் செல்கின்றார்.

இன்று 26ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை இந்தியா – ஜப்பான் இடையேயான வருட உச்சி மாநாடு ஜப்பானின் நடைபெறுகின்றது. இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி, 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு செல்கின்றார்.

13ஆவது முறையாக இந்த மாநாடு நடக்கவிருக்கின்றது. பிரதமர் மோடி 5ஆவது முறையாக இதில் கலந்துகொள்கின்றார்.

இந்தப் பயணத்தின்போது, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும், பிரதமர் நரேந்திர மோடியும் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். கொரிய தீபகற்பத்திலும், வட கொரியாவிடமும் ஜப்பானுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது

மேலும், இந்தியப் பிரதமர் மோடிக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மலைப் பகுதியில் இருக்கும் அவரது விருந்தினர் இல்லத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விருந்து அளிக்கவுள்ளார்.

வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு இவ்வாறு சொந்த இல்லத்தில் அபே விருந்து அளிப்பது இதுவே முதல்முறையாகும். அதற்கு அடுத்த நாளில் இரு நாட்டு தலைவர்களும் இந்திய – பசுபிக் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கவுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading