Local

நீர்கொழும்பு வன்முறையை விசாரிக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்! – பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது

நீர்கொழும்பில் நேற்றுமுன்தினம் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் விசாரணை செய்வதற்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த வன்முறை தொடர்பில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“இரண்டு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய் தகராறு இதற்குக் காரணமாகும். இந்தச் சம்பவத்தின்போது கூடுதலான மதுபானம் அருந்தியிருந்த மற்றுமொறு குழுவினர் சம்பவத்தில் தலையீடு செய்தனர். இந்தத் தலையீட்டை அடுத்து நீர்கொழும்பில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading