World

இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் பெண்கள் களத்தில்!

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானிய பெண்கள் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14 ஆம் திகதியன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 இந்திய துணை இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்திய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் பெண்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ஊடகவியலாளர் சஹீர் மிர்சா கூறுகையில்; புல்வாமா தாக்குதல் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவிகள் வாழும் காஷ்மீரில் இந்த தாக்குதல் மிகப்பெரிய துயரச்சம்பவமாகும் என வேதனை தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க அனைத்து பாகிஸ்தானியர்களும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்ற பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
போர் என்றைக்கும் தீர்வல்ல என்று தெரிவித்த அவர், மனித நேயத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பாகிஸ்தானிய பெண்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் #AntiHateChallenge, #WeStandWithIndia #NoToWar #CondemnPulwamaAttack என்ற ஹேஷ்டாக்குகள் தற்பொழுது பாகிஸ்தான் வட்டார சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading