Local

தங்காலை துப்பாக்சிச்சூடு – 11 பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டையில்!

தங்காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விசாரணை வேட்டையில் 11 பொலிஸ் குழுக்கள் களமிறங்கியுள்ளன.

தங்காலை – குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (25) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் பலியாகினர். ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
குறித்த சம்பவத்தையடுத்து குடாவெல்ல பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்.  இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின்பேரில் குற்றத்தடுப்பு பிரிவு  அதிகாரிகள் களத்துக்கு விரைந்தனர். அத்துடன்,  11 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. சிலரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே கொலைசெய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். சம்பவத்தின் பின்னணி குறித்து பலகோணங்களில் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading