Local

சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு விரைவில் நல்ல செய்தி! – நீதி அமைச்சர் உறுதி

“நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்.”

– இவ்வாறு நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

‘மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து 11 மாதங்கள் சிறையிலிருந்த அர்ஜூன் அலோசியஸுக்குப் பிணை வழங்க முடியும் என்றால், 11 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்க முடியாது?’ என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசு நல்ல தீர்மானம் எடுக்கவுள்ளது. இது தொடர்பில் அரசு ஆராய்ந்து வருகின்றது. இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் அறிவிப்போம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading