Local

இராதாகிருஷ்ணனுக்கு அமைச்சுப் பதவி! – தயா கமகேவின் பதவியில் மாற்றம்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் இருவரும், பிரதி அமைச்சர் ஒருவரும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக வே.இராதாகிருஷ்ணனும், தொ​ழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சராக ரவீந்திர சமரவீரவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சராக அப்துல் மஹ்ரூப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தயா கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் சமூக வலுவூட்டல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதல் தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading