Local

‘அரசமைப்புச் சபை’யில் மீண்டும் இரா.சம்பந்தன்!

சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட அரச நியமனங்களைப் பரிந்துரைக்கும் சபாநாயகர் தலைமையிலான அரசமைப்புச் சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பதவி வழியாக அரசமைப்புச் சபைக்கு உள்வாங்கப்பட்டதால் அவரது சகோதரர் சமல் ராஜபக்ச அரசமைப்புச் சபையிலிருந்து விலகியிருந்தார்.

இந்தநிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சமல் ராஜபக்சவின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading