LocalNorth

காணாமல்போனோரின் உறவுகள் முல்லையில் மாபெரும் போராட்டம்! – நாளை நடத்துவதற்கு ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது என காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நாளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி வட்டுவாகல் பாலத்தில் முடிவடையவுள்ள இந்தப் போராட்டத்தில் சகலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading