Local

பயங்கரவாத செயற்பாடுகளுடன் எனக்கு தொடர்பில்லை!

பயங்கரவாதச் செயல்பாடுகள் எதிலும் தனக்கு எவ்வித தொடர்புமில்லையெனவும் தன்னுடைய சகோதரர்கள் எவரும்கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவில்லையெனவும் தெரிவித்த ரிஷாட் பதியுதீன் இது அப்பட்டமான பொய்யென மறுப்புத்தெரிவித்தார்.

கொழும்பில்இன்று (26 இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவத்தை வைத்து சில வங்குரோத்து அரசியல்வாதிகள் ஆதாயம்தேட முனைகின்றனர்.

இஸ்லாத்துக்கு மிக நெருக்க மானமார்க்கத்தவர்களான கிறிஸ்தவ சகோதரர்கள், படுபயங்கரவாதகயவர்களால் கொல்லப்பட்ட வேதனையின் விளிம்பில் இருக்கும் எங்களது சமூகத்துக்கு இவ்வாறானவர்களின் வீண் குற்றச்சாட்டுக்கள் மேலும் கவலையளிக்கிறது.

தெமட்டகொடைஇப்ராஹிம்ஹாஜியாருடன்தனிப்பட்டதொடர்புகள்எதுவும்எனக்கில்லை.வர்த்தகரானஒருவரானஇப்ராஹிம்என்பவர்கொழும்புவர்த்தகசங்கத்தலைவர்என்றவகையில்என்னை அவரது சங்கத்துடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில்  என்னைச் சந்தித்துள்ளார். இதை விட எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை.

இந்தசந்திப்பை வைத்தே என்னையும். எனது சகோதரர்களையும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்த சிலர் பெரும்பிரயத்தனங்களை முடுக்கிவிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட வர்த்தகரான வர்த்தகருக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, ஜீ எல் பீரிஸ், பிய சேனகமகே, முன்னாள் பிரதமர் ரட்ணசிரி விக்கிரமநாயக்க விருதுகளை வழங்கியுள்ளனர். ஆனால் அந்த புகைப்படங்களை வைத்து எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை.

நான் முஸ்லிம் என்ற காரணத்தினாலேயே என்னை குறி வைத்து கேவலாமான இந்த வேலையை ஊடகங்கள் மேற்கொள்கின்றன. ஊடகங்களுக்கு தார்மீகப் பொறுப்பு இருக்க வேண்டும்.

நெருக்கடியான இந்த கால கட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரும் இரகசிய பொலிஸாரும் தீவிர விசாரணையை நடத்தி வரும் வேளையிலே ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற பொறுப்பற்ற, மக்களின் உணர்ச்சிகளை தூண்டுகின்ற பரபரப்பான செய்திகளை வெளியிட்டு நாட்டு மக்களை அச்சத்துக்கு உள்ளாக்குகின்றன.

முன்னாள் அமைச்சர் எஸ்பி திசாநாயக்க, விமல் வீரவன்ச ஆகியோரே இந்த அப்பட்டமான பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இஸ்லாத்தில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை, தற்கொலைக்கு இடமில்லை, கொலைக்கும் இடமில்லை, முஸ்லிம்கள் இந்த அக்கிரமங்களுக்கு ஒத்துழைப்பும் வழங்குவதில்லை, எனவே இந்த பயங்கரவாதிகளை அழித்து ஒழிப்பதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். எங்கள் மீது வீண்பழி சுமத்தி வேதனையில் வாழும் எங்களுக்கு மேலும் மேலும் துன்பங்களை தர வேண்டாம் என வங்குரோத்து அரசியல்வாதிகளிடமும் சில ஊடகங்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading