EastLead NewsLocal

சம்மாந்துறையில் இராணுவம் குவிக்கப்பட்டு திடீர் சோதனை!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பிரதேசத்தின் சம்புமடுப் பகுதியில் இன்று மாலை பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமக்குக் கிடைத்த முக்கிய தகவலொன்றின் பிரகாரம் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது எனப் பொலிஸாரும் இராணுவத்தினரும் தெரிவித்தனர்.

இலங்கையில் கடந்த ஞாயிறன்று 8 இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளிலும் கைது வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading