EastLocal

புதைக்கப்பட்டன சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள்!!

அம்பாறை மாவட்டம், கல்முனை, சாய்ந்தமருதில் கடந்த 26ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டு மோதல் மற்றும் தற்கொலைக் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிதும் சடலங்கள் பொலிஸாரின் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை (02) புதைக்கப்பட்டன.

6 ஆண்கள், 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேரின் சடலங்கள் மத சடங்குகளின்றி புதைக்கப்பட்டன. சிறுவர்கள் அறுவரின் சடலங்களும் மதச் சடங்குகளுடன் புதைக்கப்பட்டன.

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மதகுருவொருவரின் ஏற்பாட்டின் கீழ், அவருடைய கோரிக்கையின் பிரகாரம் மேற்படி சடலங்கள் புதைக்கப்பட்டன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading