Lead NewsLocal

சஜித்தைக் களமிறக்குவதற்கு சம்பிக்க, ராஜித கடும் எதிர்ப்பு!

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தும் கூட்டணி மற்றும் கட்சி அங்கத்துவத்தில் இருந்தும் விலகப்போகிறார்கள் என அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் அறிவித்துவிட்டனர் எனப் பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் இந்த இழுபறி நிலைமை அரசின் பங்காளிக் கட்சிகளுக்குப் பெரும் தர்மசங்கடத்தையும் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது.

இதனால் எதிரவரும் 5ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ள அரசியல் கூட்டணியில் ஐ.தே.கவின் பங்காளிக் கட்சிகள் கைச்சாத்திடும் வாய்ப்பு அருகி வருகின்றது எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading