Local

அமைச்சரவையில் புறக்கணிப்பு: மைத்திரியின் முடிவுக்கு எதிராக நீதிமன்றை நாடும் பொன்சேகா!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அடிப்படை உரிமை மனு ஒன்றை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்தபோதும் அதனை எந்தவொரு காரணமுமின்றி ஜனாதிபதி நீக்கியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தத் தீர்மானம் தனது அடிப்படை உரிமையை மீறும் செயல் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அவரது சட்டவாளர்கள் அடிப்படை உரிமை மனு ஒன்றை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading