World

மக்கா நோக்கி 2 ஏவுகணைகள்; சவூதியில் உச்சக்கட்ட பதற்றம்!

சவூதியில் அமைந்துள்ள இஸ்லாமிய புனித தளமான மக்காவை நோக்கி இரண்டு ஏவுகணைகள் பறந்து வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மக்காவை நோக்கி வந்த இந்த இரண்டு ஏவுகணைகளும் சவூதி அரசால் தடுத்து அழிக்கப்பட்டன.

ஏமன் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாகவும், ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு எதிராகவும் சவூதி செயற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக ஹவுத்தி புரட்சியாளர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்காவில் இருந்து 50 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தயிப் மற்றும் ஜெட்டா பகுதிகளின் அருகே இந்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்காவை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளும் தகர்க்கப்பட்டாலும், மீண்டும் மக்கா மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் சவூதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading