Jobs

SDTI கெம்பஸிற்கு சிறந்த தேசிய தொழில் முனைவோர் ஜனாதிபதி விருது!

 

கொழும்பு அமைந்துள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் நடைப்பெற்ற விழாவில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் பயிற்சிக்கான சர்வதேச கெம்பஸிற்கு (SDTI) 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த தேசிய தொழில் முனைவோர் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.

இந்த அங்கீகாரம் SDTI கெம்பஸின் தொழில் முனைவோர் கல்வி புதுமை மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பான அர்ப்பணிப்புக்களை எடுத்துக் காட்டுகிறது.

SDTI கெம்பஸ் தெற்காசியாவின் சிறந்த பல்கழைக்கழகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதானது அதன் சிறப்புமிக்க நற்பெயருக்கு மற்றுமொரு அங்கீகாரத்தை சேர்த்துள்ளது.

இந்த நிறுவனம் ISO 9001 2015 சான்றிதழைப் பெற்றுள்ளது.இந்த தரச் சான்றிதழானது.தரமான கல்வி மற்றும் செயல்பாட்டுச் சிறப்பிற்கான SDTI கெம்பஸின் உறிதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.

கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்தி நிதியத்துடன் இணைந்து SDTI கெம்பஸ் பல்கழைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்பு பாடநெறிகளை வழங்குகிறது.

இந்த மூலோபாய கூட்டு நடவடிக்கையானது இலங்கை முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளில் திறன் கொண்ட பல ஆசிய பிராந்திய இளைஞர்களுக்கு குறைந்த செலவில் கல்வி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading