Local

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரானார் சிவா! – செயலாளர் நிமல்; பொருளாளர் விக்கி

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இதன்போது ‘சுடர் ஒளி’ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் ‘தமிழன்’ செய்திச் சேவையின் தலைமைப் பொறுப்பாசிரியருமான ஆர்.சிவராஜா தலைவராகவும், ‘தினக்குரல்’ பத்திரிகையின் உதவி ஆசிரியர் யோ.நிமல்ராஜ் செயலாளராகவும், ‘சூரியன்’ எப்.எம். செய்திச் சேவையின் தலைமை செய்தி ஆசிரியர் ப.விக்னேஸ்வரன் பொருளாளராகவும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

இதேவேளை, உப தலைவர்களாக அனந்த பாலகிட்ணர், சி.தில்லைநாதன் ஆகியோரும், உப செயலாளராக கணபதி சர்வானந்தாவும், உப பொருளாளராக இ.நிர்ஷனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

நிர்வாக சபை உறுப்பினர்களாக என்.வித்தியாதரன், ஆர்.பாரதி, எஸ்.ஸ்ரீகஜன், கு.ஜெயேந்திரன், அ.நிக்‌ஷன், எஸ்.ராஜஜோதி, இரா.செல்வராஜா, ஜி.வாஸ் கூஞ்சா, எம்.பிரேம்ராஜ், வீ.பிரியதர்ஷன் மற்றும் ச.பிரதீபன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

அத்துடன், பிராந்திய இணைப்பாளர்கள் என்ற ரீதியில் வடக்குக்கான இணைப்பாளர்களாக தர்மினி பத்மநாதன் மற்றும் யோ.ஜூட்நிமலன் ஆகியோரும், கிழக்கு மாகாணத்துக்கான இணைப்பாளராக ச.மணிசேகரனும், மலையகத்துக்கான இணைப்பாளராக கி.ஹரேந்திரனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading