Local

தேசிய அரசு யோசனை: சபையில் சமர்ப்பிக்காமல் இருக்க ஐ.தே.க. தீர்மானம்!

தேசிய அரசு அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இருக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்றிரவு (06) ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசு அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று விவாதத்திற்கு எடுக்குமாறு நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல கருத்து வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் இதன்போது எதிர்க்கட்சியினர் குறித்த பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் குறித்த விவாதத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டு இன்று நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் அது குறிப்பிடப்பட்டது.

அத்துடன் தேசிய அரசு தொடர்பான வாக்கெடுப்புக்குக் கட்டாயம் ஆதரவளிக்குமாறு ஆளும் கட்சியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் கயந்த கருணாதிலகவால் எழுத்து மூலம் நேற்று அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading