Lead NewsLocalNorth

பேரதிர்ச்சியளிக்கின்றது மன்னார் புதைகுழி! – மேலும் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் புதைகுழியில் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவர்களின் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டபோது கருத்து வெளியிட்ட புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்டமருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச,

“இதுவரையில், புதைகுழியில் இருந்து 312 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவையாகும்.

கடந்தவாரம் வரை, 23 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இன்று (நேற்று) இந்த எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள், புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் பரிசோதனை அறிக்கை வந்தவுடன் அதனை எனக்கும், மன்னார் நீதிமன்றத்துக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading