Local

இளைஞர், குடும்பஸ்தர் கடலில் மூழ்கி மரணம்!

அம்பலாங்கொடை, அகுரல கடலில் நீராடச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குழுவொன்று கடலில் நீராடச் சென்றுள்ளது. இதன்போதே குறித்த இருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்களைக் காப்பாற்றி பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்த்த பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் மற்றும் கஹவ பிரதேசத்தைச் ​சேர்ந்த 66 வயதுடைய குடும்பஸ்தர் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading