LocalUp Country

நாவலப்பட்டியவில் பயங்கர விபத்து! இருவர் பலி!

நாவலப்பிட்டிய பத்துலுபிட்டிய பாடசாலைக்கு முன்பாக இன்று (19) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன், மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.

கம்பளையிலிருந்து கினிகத்தேனை நோக்கி, சென்ற ஆட்டோவும், கினிகத்தேனையிலிருந்து கம்பளை நோக்கி வந்த  கனரக வாகனம் ஒன்றும் நேர்க்கு நேர்மோதுண்டதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆட்டோவில் பயணித்த மூவரில் இருவர் பலியாகியதுடன், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகிறார்.

ஆட்டோவை தவறான திசையில் செலுத்தியதனால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைதுசெய்துள்ள நாவலப்பிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading