Local

இரத்தினக்கல் சின்னத்தில் ‘மெகா’ கூட்டணி – ஐ.தே.க. புது வியூகம்!

இரத்தினக்கல் சின்னத்தில் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் பாரிய கூட்டணி ஒன்றை அமைத்து அடுத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக்க ஹெல உறுமய ஆகிய கட்சிகளுடன், சிறிலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பிரிவு ஒன்றும் இந்த கூட்டணியில் இணைந்துக் கொள்ளவுள்ளது.

ராஜித்த சேனாரத்ன மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் சுயாதீனமான உறுப்பினர்களாக இந்த கூட்டணியில் இணைந்துக் கொள்ளவுள்ளனர்.

மேலும் தேர்தலின் பின்னர் ஜேவிபியும் கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஏனைய கட்சிகள் மற்றும் சிவில் சமுக அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்ற போதும், இன்னும் இறுதித் தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை.

நன்றி – Vikey Wignesh

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading