Local

அரசியல் குழப்பத்தால் தள்ளாடுகிறது பொருளாதாரம் – வரலாறுகாணாத வகையில் ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி!

அரசியல் குழப்பம் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. மறுபுறத்தில் ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துவருகின்றது.

மத்தியவங்கியினால் இன்று (26) வௌியிடப்பட்ட நாணயமாற்று வீதங்களின் அடிப்படையில், இலங்கை ரூபாவின் பெறுமதி 181. 54 சதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 177 ரூபா 59 சதமாகப் பதிவாகின்றது.

அதேவேளை, வெளிநாட்டு முதலீடுகளும் குறைவடைந்துவருகின்றன. அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிட்டால் இந்நிலைமை மேலும் மோசமடையலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading