Local

பொலிஸாருடன் சண்டித்தனம்: இளைஞர் சுட்டுப் படுகொலை!

புத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாரவில பொலிஸ் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 31 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 9 மணியளவில் மாரவில நகரத்தில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிலாபம் – முகுனுவட்டன பிரதேசத்தை சேர்ந்த அஜித் பிரசன்ன என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மாரவில நகரத்தில் நேற்றிரவு நின்ற சிலரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது அவர்களில் ஒருவர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரைச் சமாளிக்க முடியாத நிலையில் அவர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்த இளைஞர் மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading