அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை!!
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகைத் திட்டத்திற்கு சீனப் பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜூன் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
“ஈரானுடன் எங்களுக்கு வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் உள்ளன; எங்களது விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டாம் என்று எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்குத் தேவையான பெருமளவிலான கச்சா எண்ணெய் இந்த ஜலசந்தி வழியாகவே வருவதால், இது அரசியல் சார்ந்த முடிவு மட்டுமல்ல, சீனத் தேசத்தின் எரிசக்தி பாதுகாப்பு சார்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தடையை மீறி சீனா தொடர்ந்து கப்பல்களை அனுப்பும் மற்றும் எண்ணெய் வாங்கும் என்ற இந்த அறிவிப்பு, உலக அரசியலில் ஒரு நாடு மட்டுமே முடிவுகளை எடுக்கும் காலம் முடிந்துவிட்டதை பறைசாற்றுகிறது.

You must be logged in to post a comment.