Lead News

வாரிசு அரசியலா! மாற்றமா!! மக்களின் எதிர்பார்ப்பு?

எமது அரச தலைவர்கள் இருவர் புத்தாண்டு கொண்டாடும் இருவேறு சந்தர்ப்பங்கள்.
மேலுள்ள படத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த உட்கார்ந்து இருக்கிறார். அம்மணி ஷிராந்தியும் இருக்கிறார். பக்கத்தில் வருங்கால ஜனாதிபதி நாமலும் லிமினியும் இருக்கிறார். கூடவே தள்ளாடும் வயதிலும் நீதிமன்றங்கள் ஏறி இறங்கும் டேசி பாட்டியும் இருக்கிறார்.
அப்படியானால் கார்ல்டனில் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு அத்தனை சிறப்பானதல்லவா.?

ரோயல் குடும்பத்தில் பிறந்தவர்கள்,
பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டை ஆண்டவர்கள் (நாட்டால் வாழ்ந்தவர்கள்) இப்படித்தான் அனைவருடனும் புத்தாண்டை தடல்புடலாக கொண்டாட வேண்டும்…

இவர்களுக்கு ஷிராந்தி மேடம் ரபன் வாசிப்பதை நாடு முழுவதும் ரசிப்பதே அவுருதின் கொள்ளை அழகு. இதுவே நாட்டுக்கும் நல்லது.
இவர்களை அருகில் வைத்து புது பானையில் பாலை கொதிக்கவிட்டால் தான் நாடு முழுவதும் செல்வம் பெருகும்
என நினைக்கும் அறிவாளிகள் வாழும் நாடு இது?

இரண்டாவது படத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுர,
“டித்வா” பேரழிவினால் சேதமடைந்த அனுராதபுரம், கல்நேவ பகுதியில் உள்ள இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிய வீட்டில் இன்று நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்.

ஆனால் மஹிந்தவை உள்ளங்கையில் சுமக்கும் ஒரு கூட்டம்
ஜனாதிபதி அநுரவை பார்த்து இதெல்லாம் ஒரு விளம்பரம். மக்களை ஏமாற்றும் வித்தை என்கிறது.

இதற்கு முன்பு அவுருது மார்க்கெட்டிங்கை மிகவும் திறமையாக செய்தவர் மகிந்த. அவர் எப்போதும் தனது குடும்பத்தையே முதன்மை படுத்தினார்.
மகிந்தின் குடும்பம் அரச செல்வாக்கோடு வாழும் விதத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்தார்.
தனது ஆதரவாளர்களையும் அதற்கே பழக்கப்படுத்தினார்.
அது மகிந்த திட்டத்திற்கு பயனுள்ளதாக இருந்தது.
ஏனெனில் மகிந்த திட்டம் என்பது முற்றிலும் ஒரு குடும்பத் திட்டம்…
இன்னும் ‘பொஹொட்டுவ’ கட்சிக்காக உழைக்கும் யாரும் அதன் தலைவராக வேண்டும் என்று கனவு காணவில்லை.

அது ராஜபக்ஷ குடும்பத்தின் உரிமை என்பதை எல்லோரும் அறிவார்கள்.

எப்படியிருந்தாலும், மகிந்தைப் போல ஒரு குடும்பத் திட்டம் ஜனாதிபதி அநுரவிடம் இல்லை என்பதே சிலருக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. குறிப்பாக அநுரவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு.
அவர்கள் அதை அநுரவின் குறையாகவே பார்க்கிறார்கள்.
அந்த அளவுக்கு மகிந்தவின் அவுருது பிரச்சாரம் அவர்களை கடுமையாக பாதித்து இருக்கிறது.

ஆனால் ஒன்று. ரன்பண்டாவின் மகனுக்கும், இவர்களது பக்த கோடிகளுக்கும் இந்த “ராக்கெட் சயன்ஸ்” எப்போதும் புரியப் போவதில்லை. இவர்கள் எதையாவது புலம்பிக்கொண்டு இருகட்டும். இந்த நாட்டுக்கு இனியாவது நல்லது நடக்கட்டும்…

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading