World

அமெரிக்கா தாக்கினால்..? கொரில்லா போர் முறையை கையில் எடுக்கும் கனடா

Canada Takes Gorilla Method to Face US Attack: கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவை எதிர்கொள்ள கனேடிய ராணுவம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

போருக்கு தயாராகும் கனடா

நீண்ட நாள் நட்பு நாடும், அண்டை நாடும் ஆன அமெரிக்கா ஒருவேளை கனடா மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கனேடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் ராணுவ படையினர் இணைந்து ரகசிய திட்டங்களையும் போர் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா தாக்கினால் என்ன செய்வது? கொரில்லா போர் முறையை கையில் எடுக்கும் கனடா | Canada Takes Gorilla Method To Face Us Attack

100 ஆண்டுகளில் முதல் முறையாக தன்னுடைய நீண்ட நாள் நட்பு நாடான அமெரிக்காவை சாத்தியமான எதிரியாக கருதி கனடா இந்த ராணுவ திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி அளித்த தகவலில், அமெரிக்கா கனடாவை ராணுவ ரீதியாக கைப்பற்றும் ஆபத்துகள் மிக குறைவு தான். இருப்பினும் அதனை தீவிர ஆபத்தாக வகைப்படுத்தி கனடா அதனை ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக டொனால்ட் டிரம்ப் வகைப்படுத்தி தொடர்ந்து பேசி வரும் நிலையில், கனடாவின் பாதுகாப்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது தங்களின் முக்கிய கடமை என்று கனடா பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

கொரில்லா முறை போர்

கனடாவின் ராணுவ பலத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவின் ராணுவ பலம் மிகப்பெரியது என்பதால், 2 முதல் 7 நாட்களுக்கு கனடாவின் முக்கிய நகரங்களை அமெரிக்காவால் கைப்பற்றி விட முடியும்.

அமெரிக்கா தாக்கினால் என்ன செய்வது? கொரில்லா போர் முறையை கையில் எடுக்கும் கனடா | Canada Takes Gorilla Method To Face Us Attack

இதனால் அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகள் பயன்படுத்திய கொரில்லா போர் முறை பயன்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது.

கொரில்லா போர் முறை என்பது ட்ரோன் தாக்குதல்கள், மறைமுகத் தாக்குதல் மற்றும் சசிச்செயல்கள் ஆகிய உள்ளடக்கிய தாக்குதல் முறையாகும்.

அதே சமயம் அமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க சுமார் 4,00,000 நபர்களை கொண்ட தன்னார்வ படைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கனேடிய ராணுவத்தின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜென்னி கரிக்னான் தகவல் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading