World

ஆண்டுக்கு ரூ.29 லட்சம் வருமானம்…30 வயதில் ஓய்வுபெற்ற இளைஞர்

Rs. 280 Million Investment – How a 30-Year-Old Achieved Early Retirement : சீனாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர், தினமும் 18 மணி நேரம் வரை வேலை செய்துவந்த நிலையில், 14 வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து வேலையை விட்டுவிட்டு ஓய்வுபெற்றுள்ளார். இவரின் இந்த வித்தியாசமான அனுகுமுறை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த ஃபேன் ஜுன்ஜி, ஹுனான் மாகாணத்தின் சாங்ஷா நகரில் உள்ள ஆன்லைன் மருத்துவப் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

30 வயதில் ஓய்வுபெற்ற சீன இளைஞர் - ஆண்டுக்கு ரூ.29 லட்சம் வருமானம் தரும் வித்தியாசமான திட்டம்! | Chinese Man 30 Buys 14 Old Flats Retires Early

அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்ததால், தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் கிடைக்கவில்லை. இதனால், வேலைக்குச் செல்லாமலேயே வருமானம் கிடைக்கும் வகையில் முதலீடு செய்ய முடிவு செய்தார்.

இதன்படி, 2023-ம் ஆண்டு முதல் குறைந்த விலையில் கிடைக்கும் பழைய வீடுகளை வாங்கத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளில் சுமார் ரூ.2.8 கோடி செலவில் 14 வீடுகளை வாங்கினார். குறிப்பாக, வாடகைத் தேவை அதிகம் இருக்கும் எனக் கருதி சியாங்யா மருத்துவமனைக்கு அருகிலுள்ள வீடுகளைத் தேர்வு செய்தார்.

அவர் வாங்கிய 14 வீடுகளில் 11 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 2.1 லட்சம் யுவான், அதாவது இந்திய மதிப்பில் ரூ.29 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வருமானம் கிடைத்தது.இதனால், 30 வயதிலேயே தனது வேலையை விட்டுவிட்டு ஓய்வுபெற்றுள்ளார்.

இருப்பினும், வீடுகளைப் பராமரிப்பது அவருக்குச் சவாலாக மாறியது. பழுதுபார்ப்புச் செலவு, வீடுகள் காலியாக இருக்கும் காலங்களில் ஏற்படும் இழப்பு, வரி மற்றும் தரகர் கட்டணம் போன்றவற்றால் கிடைக்கும் வாடகைப் பணத்தில் முழுவதும் லாபமாகத் தங்குவதில்லை.

இதனால், அக்டோபர் 26-ம் தேதி முதல் புதிதாக வீடுகள் வாங்கப்போவதில்லை என்று அறிவித்த அவர்,  இனி நிறுவனங்களின் பங்குகள் மற்றும் முதலீட்டு நிதிகளில் பணத்தை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.தேவையான நேரத்தில் பங்குகளை விற்றுப் பணமாக்குவது எளிது என்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.

தற்போது லாவோஸ் நாட்டில் தங்கியிருந்து பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து வருகிறார். அன்றாடச் செலவுகள் மற்றும் அவசரத் தேவைகளுக்குத் தனியாகப் பணம் வைத்துள்ளதுடன், அடுத்த 1 முதல் 3 ஆண்டுகளுக்குத் தேவையான தொகையையும் பாதுகாப்பான முதலீடுகளில் வைத்துள்ளார்.

தனது முதலீட்டு முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறவில்லை. ஒவ்வொருவரும் தங்களது வருமானம், செலவு மற்றும் குடும்பச் சூழலுக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும் என்பதே அவரது கருத்து.

14 வீடுகளை வாங்கி 30 வயதிலேயே ஓய்வுபெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், அவற்றைப் பராமரிப்பதில் உள்ள சிரமங்களால் தற்போது தனது முதலீட்டு முறையையே மாற்றியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading