Lead News

2027 – வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள்

மேலதிக 2027 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள்

‘சொந்தமாக ஓர் இடம் – அழகானதொரு வாழ்வு’ திட்டத்தின் கீழ் 70,000 வீடுகளை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2027 ஆம் ஆண்டில் 10,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு வீட்டிற்கு வழங்கப்படும் வீட்டுவசதி உதவித்தொகை 1 மில்லியன் ரூபாயிலிருந்து 1.5 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்படும்.

தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தவும், தொழில்துறைகள் மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தேவையான நீர் விநியோகத்தை உறுதி செய்யவும் 77 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த சுமார் 13,000 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளன. இவர்களை இரண்டு ஆண்டுகளுக்குள் மீள்குடியேற்ற அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 6,000 மில்லியன் ரூபாயுடன், மேலதிகமாக 4,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்காக 70,000 வீடுகளை அமைக்கும் இலக்கின் ஒரு பகுதியாக, 2027-ஆம் ஆண்டில் 10,000 வீடுகளைக் கட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வீட்டிற்கான உதவித்தொகை 1 மில்லியன் ரூபாயிலிருந்து 1.5 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது; இதற்காக 15,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

நீண்டகாலமாகச் சரியாகப் பராமரிக்கப்படாத தொடருந்து நிலையங்களைச் சீரமைக்கும் திட்டத்திற்காக, 2027 ஆம் ஆண்டில் 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீண்டகாலமாகச் சரியாகப் பராமரிக்கப்படாத  தொடருந்து நிலையங்களைச் சீரமைக்கும் திட்டத்திற்காக, 2027 ஆம் ஆண்டில் 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணத்தின் நகர்ப்புறப் பகுதிகளுக்கு மெட்ரோ பேருந்து சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ‘எல் நினோ’ (El Niño) அபாயத்தினால் எழக்கூடிய தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், முற்கூட்டியே தயார்நிலை நடவடிக்கைகளுக்காக 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை கொள்முதல் செய்ய 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொத்மலை அணையில் தற்போது நடைமுறையில் உள்ள, அணையின் கதவுகள் திறக்கப்படும்போது எச்சரிக்கை ஒலியை எழுப்பும் முறையை மேலும் மேம்படுத்த வேண்டியது அவசியம்.

புதிய பேரிடர் முகாமைத்துவத் திட்டங்கள் 13-க்காக மொத்தம் 2,900 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ பாதுகாப்புகளை ஏற்படுத்த, ‘அணை பாதுகாப்புச் சட்டம்’ (Dam Safety Act) ஒன்றைக் கொண்டுவரவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 5 மில்லியன் ரூபா வரையிலான சலுகை அடிப்படையிலான வீட்டுக்கடன் திட்டத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதில், முதல் 3 மில்லியன் ரூபா கடன் தொகைக்கு 10 சதவீத வட்டி மானியமும், எஞ்சிய 2 மில்லியன் ரூபா கடன் தொகைக்கு 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 2,500 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 2,500 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்குத் தொடர்ந்து நிதி உதவியை வழங்குவதற்காக, ‘அஸ்வெசும’   உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 2027 ஆம் ஆண்டில் 230 பில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

2027 - வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு! அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் | Sri Lanka 2027 Budget Key Proposals Revealed

சர்வதேசப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான பாராட்டுப் பரிசாக, ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கு 100 மில்லியன் ரூபாயும், உலக தடகள சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கத்திற்கு 100 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய (Commonwealth) விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்கு 75 மில்லியன் ரூபாயும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்கு 50 மில்லியன் ரூபாயும், சார்க் (SAARC) விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்கு 15 மில்லியன் ரூபாய் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, இப்போட்டிகளிலும் பிற சர்வதேசப் போட்டிகளிலும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெல்பவர்களுக்கும் பாராட்டுப் பரிசுகளை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

சுகததாச தேசிய உள்ளக விளையாட்டு வளாகத்தை மேம்படுத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும், தேவையான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும், சுகததாச சர்வதேச விளையாட்டரங்கில் செயற்கை ஓட்டப்பாதையை (synthetic running track) அமைப்பதற்கும் 1,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தியகம விளையாட்டு வளாகத்தில், தேசிய உயர் செயல்திறன் மையத்தின் (National High-Performance Centre) இரண்டாம் கட்டத்தை நிறுவுவதற்காக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 200 ரூபாய் நாளாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவு, 2027ஆம் ஆண்டும் தொடர்ந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2027ஆம் ஆண்டில் பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்காக 13 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் விவசாயத் துறைக்குத் தேவையான அடிப்படை இனப்பெருக்க கால்நடைகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்காக 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மில்கோ நிறுவனத்தின் படல்கம நிலையத்திற்கு 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2027 - வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு! அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் | Sri Lanka 2027 Budget Key Proposals Revealed

உணவுப் பாதுகாப்புக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த 700 மில்லியன் ரூபாவுடன் மேலதிகமாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது, தெரிவுசெய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் நெல் சந்தைப்படுத்தல் சபையிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யவும், தமது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், அரிசி பதப்படுத்துதலுக்குத் தேவையான இயந்திரங்களைக் கொள்வனவு செய்யவும் உதவும்.

பயிரிடப்படாத மற்றும் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட நெல் நிலங்களை, விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர், ஏனைய பயிர்களை (field crops) மற்றும் நிரந்தரப் பயிர்களை (permanent crops) பயிரிடுவதற்குப் பயன்படுத்த உரிமையாளர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை வழங்கப்படும்.

இத்தகைய போதிய பயன்பாட்டில் இல்லாத நிலங்களில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் 1.55 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

மீன்பிடித் தொழிலின் போது விபத்துகளால் உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை, 1 மில்லியன் ரூபாவிலிருந்து 2 மில்லியன் ரூபாவாக இருமடங்காக்கப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், சிகிரியா உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் முனையம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
190 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் கட்டப்பட்டு, 2013 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்த மத்தள சர்வதேச விமான நிலையம், இன்று (2026) வரை 70,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான திரண்ட நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இந்த நஷ்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

எனவே, விமான நிலைய செயல்பாடுகள், தரவு மையங்கள், உணவு மற்றும் கேட்டரிங் சேவைகள், மற்றும் விமான பராமரிப்பு சேவைகள் ஆகிய துறைகளை சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து மேம்படுத்துவதற்காக, ‘ஆர்வ வெளிப்பாட்டு கோரிக்கைகள்’ (EOI) கோரப்பட்டு, அந்த நடைமுறை நிறைவடைந்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ‘முன்மொழிவு கோரிக்கைகளை’ (RFP) பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஓராண்டுக்குள் இதற்கான புதிய முதலீட்டாளர்களைத் தேர்ந்தெடுக்க எதிர்பார்க்கிறோம்.

2027 - வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு! அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் | Sri Lanka 2027 Budget Key Proposals Revealed

இரத்மலானை சர்வதேச விமான நிலையமானது, விமானிகள் பயிற்சி, உள்நாட்டு விமான சேவை, வணிக ரீதியான விமான சேவை மற்றும் பிராந்திய விமான சேவை ஆகியவற்றுக்காக மேம்படுத்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

விமானப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள ஓடுபாதையைச் சீரமைக்கவும், அதன் நீளத்தை 1,400 மீட்டரிலிருந்து 1,771 மீட்டராக நீட்டிக்கவும் 6,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டம், இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் (AASL) நிதியுதவியுடன் 2027-ஆம் ஆண்டு தொடங்கப்படும்.

திருகோணமலை துறைமுகத்தில் ‘ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் (பிரைவேட்) லிமிடெட்’ (Trinco Petroleum Terminal (Private) Limited) நிறுவனத்திற்குச் சொந்தமான 61 எரிபொருள் தாங்கிகளில் 29 தாங்கிகளை, பொது-தனியார் கூட்டாண்மை (PPP) அடிப்படையில் மேம்படுத்துவதற்கான முதலீட்டு முன்மொழிவுகள் 2027-ஆம் ஆண்டு கோரப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிறுவனம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி (Lanka IOC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் நிறுவப்பட்டது.

 விமான நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியை அகலப்படுத்துதல் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மேம்பாலமொன்றை நிர்மாணித்தல் தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 சர்வதேச விமானப் பயணிகள் நாட்டின் உள்நாட்டு இடங்களுக்குப் பயணிப்பதற்கு வசதியாக, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அடுத்த ஆண்டு 800 மில்லியன் ரூபாய் செலவில் உள்நாட்டு விமான நிலைய முனையமொன்றை நிர்மாணிக்க ஆரம்பிக்கவுள்ளது.
2032ஆம் ஆண்டளவில் எதிர்பார்க்கப்படும் 16 மில்லியன் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளைக் கையாளும் திறனை விரிவுபடுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக சமுர்த்தி வங்கிகள் ஊடாக 5,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான கடன் திட்டமொன்றை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

இதன்படி, 4 சதவீத சலுகை வட்டி வீதத்தில் கடன்கள் வழங்கப்படவுள்ளன. எஞ்சிய வட்டிச் செலவை திறைசேரி பொறுப்பேற்கும்.

இந்தக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளும் தொழில்முயற்சியாளர்கள் குறைந்தபட்சம் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஐந்து பயனாளிகளுக்காவது வேலைவாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.

களனி ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் மேலதிக ஆய்வுகளை விரைவாக முன்னெடுப்பதற்காக துறைமுக அதிகாரசபையின் நிதியிலிருந்து 300 மில்லியன் ரூபாய் செலவிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சாத்தியக்கூறு ஆய்வு அடுத்த ஆண்டு முதல் அரையாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்நாட்டு தங்குமிடச் சுற்றுலாத் துறையின் (Home-stay Tourism) அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்காக 7.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

இதன்படி, தங்குமிட வசதிகளை ஆரம்பிக்க அல்லது விரிவுபடுத்த தகுதியுடைய தொழில்முயற்சியாளர்களுக்கு வருடாந்தம் 3 சதவீத வட்டி வீதத்தில் அதிகபட்சம் 2 மில்லியன் ரூபாய் வரை சலுகைக் கடன்கள் வழங்கப்படவுள்ளன.

மீன்பிடித் துறைக்காக 2027-ஆம் ஆண்டில் வட்டி இல்லாக் கடன் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.
பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சலுகை அடிப்படையிலான கடன் வசதிகளை வழங்குவதற்காக 12.5 பில்லியன் ரூபா பெறுமதியான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, சமுர்த்தி வங்கிகள் ஊடாக அதிகபட்சம் 1 மில்லியன் ரூபாய் வரை கடன் தொகை வழங்கப்படும்.

இந்தக் கடன்களுககு வருடாந்தம் 3 சதவீத வட்டி அறவிடப்படுவதுடன், குழுக் கடன் அடிப்படையில் கடன் வசதிகள் வழங்கப்படவுள்ளன.

கிராமப்புறப் பாலங்களின் மேம்பாடு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக 10,630 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கண்டி பல்முனை போக்குவரத்து மையத்திற்குச் செல்லும் அணுகு பாதையிலும், அலவ்வ மற்றும் முத்தேட்டுக்கல ஆகிய இடங்களில் தொடருந்து பாதைகளுக்குக் குறுக்காகவும் மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

2027 - வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு! அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் | Sri Lanka 2027 Budget Key Proposals Revealed

தனியார் துறையில் டிஜிட்டல் ஸ்டார்ட்அப்கள் (digital startups) மற்றும் புதிய டிஜிட்டல் முயற்சிகளுக்கான நிதியுதவியை அரசாங்கம் பலப்படுத்தும்; இதற்காக 10 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2027 ஆம் ஆண்டில் டிஜிட்டல் மாற்றத்திற்காக மொத்தம் 28.5 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது இலங்கையின் வரலாற்றில் டிஜிட்டல் துறைக்கு ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய தொகையாகும்.

இலங்கையின் வீதி மற்றும் தொடருந்து உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்து நவீனமயப்படுத்துவதற்காக வரலாறு காணாத வகையில் 487 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ருவான்புர விரைவுச்சாலையின் நிர்மாணப் பணிகள் டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இதற்காக, 2026-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக, அடுத்த ஆண்டிற்காக மேலும் 27,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் – தம்புள்ளை விரைவுச்சாலையில், குருநாகல் முதல் கலேவெல வரையிலான பகுதியை நிர்மாணிப்பதற்காக 30,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பணமில்லாப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக, ‘GovPay’ மற்றும் QR-அடிப்படையிலான கட்டண முறைகளைகளை ஊக்குவிக்க நடவடிக்கை.
தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக வட்டியில்லாக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி தொடர்ந்து வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவு 6,250 ரூபாவிலிருந்து 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

2027 - வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு! அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் | Sri Lanka 2027 Budget Key Proposals Revealed

வவுனியா பல்கலைக்கழகத்தின் பணியாளர்களுக்கான தங்குமிட வசதிகளை நிர்மாணிக்கும் 2,050 மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டம் 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களைப் புனரமைப்பதற்காக 2027ஆம் ஆண்டில் மேலும் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பேராதனைப் பல்கலைக்கழகமும் உள்ளடங்குகிறது.

ஆசிரியர் பயிற்சி மற்றும் பிரிவேனா மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு.

2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், தேசிய கல்வி நிறுவகத்தில் ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுவரும் மாணவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 10,500 ரூபாவிலிருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

பிரிவேனா கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் பிக்குமார்களுக்கான நாளாந்தக் கொடுப்பனவு 5 ரூபாவிலிருந்து 50 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

தகைமையுடைய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் கொடுப்பனவு 7,500 ரூபாவிலிருந்து 12,500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை வழங்கும் தனது திட்டம் எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடரும் என சீன அரசாங்கம் இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 750,000 மாணவர்களுக்கு பிராட்பேண்ட் இணைய வசதிகள் வழங்கப்படவுள்ளது.
பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான திட்ட வரைபடத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், திறைசேரியின் 100 சதவீத உரிமையைக் கொண்ட GoVTech நிறுவனம் ஏற்கனவே தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளதுடன், தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையும் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரப் பேரவையை நிறுவுவதற்கான சட்டமூலம் 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சட்டத்தின் ஊடாக டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையொன்றை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக பிராட்பேண்ட் இணைய வசதிக்கான வவுச்சர்கள் மூலம் 2026ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டிலும் இதற்கான மேலதிக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

டிஜிட்டல் வர்த்தகங்கள் மற்றும் தொழில்முயற்சிகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் டிஜிட்டல் தொழில்முயற்சி நிதியமொன்றை உருவாக்குவதற்காக 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

2027 - வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு! அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் | Sri Lanka 2027 Budget Key Proposals Revealed

மன்னார் படுகையில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள நான்கு வலயங்களில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபையினால் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான கேள்விப்பத்திரங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதியாகும்.

நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், கேள்விப்பத்திரங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் குறித்த வலயங்கள் விரைவாக வழங்கப்படும்.

டிஜிட்டல் பொருளாதாரச் சட்டமொன்று உருவாக்கப்படுவதுடன், 2027ஆம் ஆண்டில் இணையப் பாதுகாப்பு அதிகாரசபையொன்றும் நிறுவப்படவுள்ளது.

மேலும், டிஜிட்டல் கொள்வனவுகளுக்கான புதிய கொள்முதல் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன், விஜேராம மாவத்தையில் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையமொன்று (AI Excellence Centre) நிறுவப்படவுள்ளது.

அரசாங்கப் பிரதிநிதிகள், நிபுணர்கள் மற்றும் கல்வித்துறையினரை ஒரே இடத்தில் ஒன்றிணைத்து இத்துறையின் ஆற்றலை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 30 மெகாவோட் கொள்ளளவு கொண்ட மின்கல மின்சாரச் சேமிப்புக் கட்டமைப்பொன்ற நிறவப்படவுள்ளது.

ஏரிகளில் மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்திக் கட்டமைப்புக்களை நிறுவி 500 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தை 45 நாட்களுக்குப் போதுமான அளவில் உறுதிப்படுத்தும் வகையில் எரிபொருள் சேமிப்புத் திறன் அதிகரிக்கப்படவுள்ளது.

முத்துராஜவெலையிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) வரை விமான எரிபொருள் குழாய்த் தொகுதியை அமைப்பதற்கும், 92,000 மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட எரிபொருள் சேமிப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் 22.34 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் இருந்து துறைமுகம் வரையிலான எரிபொருள் குழாய்த் திட்டத்திற்காக 16,332 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேள்விபத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் எரிபொருளை இறக்கும் காலத்தைத் தற்போதுள்ள 96 மணித்தியாலங்களில் இருந்து 48 மணித்தியாலங்களாக குறைக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

18 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் கப்பல்களுக்குச் செலுத்தப்படும் தாமதக் கட்டணங்களையும் குறைக்க முடியும்.

தற்போது எரிபொருள் இறக்குமதி செய்வதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் கப்பல் நிறுவனங்களுக்கு சுமார் 3 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது.

2027 - வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு! அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் | Sri Lanka 2027 Budget Key Proposals Revealed

மாதாந்தம் 180 அலகுகளுககு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் 3 இலட்சம் மின் பாவனையாளர்களுககு இலவசமாக ஸ்மார்ட் மின் மாணிகள் வழங்கப்படவுள்ளன.

அதேவேளை, 120 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின்(LECO) அனைத்து மின் பாவனையாளர்களுக்கும் ஸ்மார்ட் மின்மானிகள் வழங்கப்படவுள்ளன.

  2029ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பை 69 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலங்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீத துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி (PAL) நீக்கப்படும்.
அண்மையில் ஏற்பட்டதைப் போன்ற நாடளாவிய மின்தடைச் சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தேசிய மின்சாரக் கட்டமைப்பை மேம்படுத்தவும் அதன் வலுவையும் மீள்திறனையும் அதிகரிக்கவும் அரசாங்கம் 26.5 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

 

வீடுகளில் கூரை சூரிய மின்சக்தி கட்டமைப்புகளுடன் மின்கல சேமிப்பு முறைமைகளைப் பொருத்துவோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோவாட் மின்கல சேமிப்புத் திறனுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும். அதிகபட்சமாக 10 கிலோவாட் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு 250,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும்.

இந்தத் திட்டத்திற்காக 3,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

2027 - வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு! அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் | Sri Lanka 2027 Budget Key Proposals Revealed

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஸ்கேன் கட்டமைப்பை விரிவுப்படுத்துவதற்காக நிரந்தர ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் கொள்கலன் ஸ்கேன் இயந்திரகளைப் பெற்றுக் கொள்ள 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
இலங்கை – ஐரோப்பிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்காக 3,430 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

தேசிய ஒற்றை முதலீட்டு மையத்தை உருவாக்குவதற்கான ஆலோசனை நிறுவனமொன்றைத் தெரிவுசெய்ய கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.  இதனை நிறுவுவதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஏற்றுமதிப் பொருட்களுக்காக தேசிய ஒற்றை வர்த்தகச் சாளர முறையை 2027ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் ஏற்றுமதியாளர்களுக்கும், இரண்டாம் அரையாண்டில் இறக்குமதியாளர்கள் மற்றும் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கும் அறிமுகப்படுத்துவதுடன், இதனை மேலும் மேம்படுத்துவதற்காக 1,990 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
நிதி வணிகச் சட்டம் திருத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
கலால் வரி நிவாரணச் சட்டம் மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
சுங்கக் கட்டளைச் சட்டம் (Customs Ordinance) 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருத்தப்படும்.
தேசிய புள்ளிவிவரச் சட்டம் (National Statistics Act) தற்போது வரைவு செய்யப்பட்டு வருகிறது.
முதலீட்டுப் பாதுகாப்பு மசோதா (Investment Protection Bill), சட்டமா அதிபரின் அனுமதி பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் உரை

அனைத்து பிரஜைகளுக்கும் வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது பிரதான நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  உண்மையான மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

சுதந்திரத்திற்கு பிறகு இருந்த குடும்ப ஆட்சியை முறியடித்து அந்த அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர்.

மத்தியக் கிழக்கில் மூண்டுள்ள போர் நிலை ஒரு நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.  ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டமை எமது வலுசக்தித் துறையை பெரும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.   இன்றிருக்கின்ற பொருளாார சவாலை எதிர்கொள்வதோடு, எதிர்கால சந்ததியினர் அந்த சவால்களை எதிர்கொள்ளாத வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும்.

பல்வேறு துறைகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 147 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். நட்டமடையும் அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியுள்ளோம்.

2027 - வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு! அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் | Sri Lanka 2027 Budget Key Proposals Revealed

2025 ஆம் ஆண்டில், நடப்புக் கணக்கு 1,719 மில்லியன் அமெரிக்க டொலர் உபரியைப் பதிவு செய்துள்ளது. இது வரலாற்றிலேயே மிக உயர்ந்த அளவாகும். இந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற பணவனுப்பல்கள் 9 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்த கடன் விகிதம், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெற்றிகரமாக 95 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனிப்பட்ட விவகாரம் ஒன்றின் காரணமாக 2008 ஆம் ஆண்டில் எமிரேட்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மையை ரத்து செய்ததிலிருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மொத்தம் 528 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

அன்றில் இருந்து தற்போதுவரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடுமையன நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது.   2025 ஆம் ஆண்டில் எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் 4,042 மில்லியன் டொலர்களைச் செலவிட்டது. 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள், எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 4,487 மில்லியன் டொலர்களை எட்டியது. இது முந்தைய ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட மொத்தச் செலவை விட அதிகமாகும்.

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் 1.6 பில்லியன் டொலர்களாக இருந்தன. அதேவேளையில், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 1.5 பில்லியன் டொலர் மதிப்பிலான கடன் பத்திரங்கள் (LCs) திறக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், வாகன இறக்குமதிகள் 3 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருந்துள்ளன.

இதனுடன் எரிபொருள் இறக்குமதிக்கான கூடுதல் செலவான 2 பில்லியன் டொலரையும் சேர்த்தால், நாடு 5 பில்லியன் டொலருக்கும் அதிகமான கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இருப்பினும், இத்தகைய செலவுகள் இருந்தபோதிலும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 7 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வருடாந்த பணவீக்கம் 2025 டிசம்பரில் 2.1 சதவீதத்திலிருந்து, 2026 அக்டோபரில் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்பட்ட திட்டத்தின் கீழ், பொதுக் கடனை 2032-ஆம் ஆண்டிற்குள் 95 சதவீதமாகக் குறைக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இலக்கு வைத்திருந்தது.

இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது மீளாய்வின் கணிப்பின்படி, தற்போதைய பொருளாதாரப் போக்கின் அடிப்படையில், அந்த ஆண்டிற்குள் பொதுக் கடன் 87 சதவீதமாகக் குறையக்கூடும்.

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அரச வங்கிகள் தனியார் துறைக்கு வழங்கிய கடன்களின் அளவு 25% அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதார மற்றும் சமூகத் தரவரிசைகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

முன்னதாக திவாலான நிலையில் இருந்த இலங்கை, தற்போது தரமதிப்பீட்டு நிறுவனங்களால் ‘CC+’ நிலையிலிருந்து ‘B-‘ நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நெருக்கடியானது இலங்கையின் எரிசக்தி விநியோகத்தைப் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், இதன் விளைவாக நிவாரண மானியங்களுக்காக அரசாங்கம் 147 பில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading