இலங்கையில் அழகு இல்லாத இடம் ஏதேனும் உண்டா?வியந்து பாராட்டிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போதைய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இலங்கையின் இயற்கை எழிலை மனதாரப் பாராட்டியுள்ளார்.
இலங்கை ஒரு அழகான நாடு என்றும், அங்கு அழகு இல்லாத இடமே இல்லை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கைக் கால நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், தான் விளையாடிய காலத்தில் துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் நடைபெற்ற தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற முடியாமல் போனதாகக் கூறினார்.
இருப்பினும், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, வர்ணனையாளராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அவர் முதன்முதலில் பயணித்த நாடு இலங்கைதான் என்பதை நினைவு கூர்ந்தார்.
இலங்கைக்குத் தான் வந்த முதல் முறையிலேயே இந்த நாட்டை தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாகக் குறிப்பிட்ட மஞ்ச்ரேக்கர், இலங்கை உண்மையில் சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமான மற்றும் அழகான நாடு எனத் தனது வாழ்த்துகளையும் அன்பையும் வெளிப்படுத்தியுளiral

You must be logged in to post a comment.