Lead News

இலங்கையில் தனிநபர் வருமானம் 5000 டொலரை தாண்டியது!!

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) வருமானம் 5,000 அமெரிக்க டொலர்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையின்படி, இலங்கையின் தனிநபர் வருமானம் 5,003 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 4,546 டொலர்களாக இருந்த இந்த வருமானம், குறுகிய காலத்தில் 10 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து இந்த வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கிய காரணியாக இது பார்க்கப்படுகிறது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading