World

சீனா ஈரானுக்கு அனுப்பிய மர்ம பரிசு! அச்சத்தில் டிரம்ப்!!

சீனாவிலிருந்து ஈரானுக்கு சந்தேகத்திற்கிடமான பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் இடைமறித்து சோதனையிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனை ஈரானுக்கு சீனா வழங்கிய ஒரு “பரிசு” என வர்ணித்துள்ள அவர், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தனக்கு ஒரு நல்ல புரிந்துணர்வு இருப்பதாகக் கருதிய வேளையில் இது ஆச்சரியத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிடிபட்ட கப்பலில் உள்ள பொருட்கள் அல்லது அது பிடிக்கப்பட்ட இடம் குறித்த மேலதிக விவரங்களை அவர் வெளியிடவில்லை.

அதேவேளை, ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தக் காலம் முடிவடைய உள்ள நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தனது சீனப் பயணத்தை எதிர்வரும் மே மாதம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading